மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி..! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36ஆக அதிகரிப்பு

0 2080

நாட்டில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கு, டிசம்பர் 1ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, மரபியல் சோதனையில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இவர் ஏற்கனவே ஃபைசர் தடுப்பூசியின் இரு டோஸ்களும் செலுத்திக்கொண்டவர் என்றும் சண்டிகர் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே போல், ஆந்திராவில் 34 வயது நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தில் இருந்து மும்பை வந்தவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என வந்த நிலையில், அவர் விஷாகப்பட்டினம் சென்றடைந்தார்.

இதனை அடுத்து, அங்கு அவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், மரபணு பகுப்பாய்வு சோதனையில் ஒமிக்ரான் உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த 34 வயது நபருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments