இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

0 1879

ஒமிக்ரான் என்ற பெயரில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

இதில் பெரும்பாலோர் லேசான பாதிப்புடன் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதன் முதலாக ஒமிக்ரான் பரவிய பெங்களூரின் கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்துப் பயணிகளின் விவரங்களையும் பதிவு செய்து வைக்குமாறு அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments