சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

0 2672
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவசம் போர்டு அறிவித்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியிலுள்ள வனப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பம்பை ஆற்றில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments