கோவில் நிலத்தில் வாடகை பாக்கி வச்சா வவ்வாலா தான் பிறப்பீங்க..! ஆதினம் அல்டிமேட் அட்வைஸ்..!

0 2596
கோவில் நிலத்தில் வாடகை பாக்கி வச்சா வவ்வாலா தான் பிறப்பீங்க..! ஆதினம் அல்டிமேட் அட்வைஸ்..!

கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகளில் இருந்து கொண்டு வாடகை கொடுக்காமல் இருந்தால் அடுத்த பிறவியில் வவ்வாலாகவோ பெருச்சாளியாகத்தான் பிறப்பீர்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. திருக்குட நன்னீராட்டு விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைச் செயலாளர் ஜெயகாந்தன் , உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அப்போது கோவில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோவில் கடையில் இருந்து கொண்டு வாடகை கொடுக்காமல் இருந்தாலோ, கோயிலுக்கு கடனை செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள் இல்லையேல் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ அல்லது மூஞ்சூரு எலியாகவோதான் பிறக்க நேரிடும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments