கர்நாடகாவில் ரவுடியின் காரை வழிமறித்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.!

0 2967

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ரவுடியின் காரை வழிமறித்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு ஹூலி மாவு பகுதியை சேர்ந்த நாராயணா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி ஹூலிமாவு டி.எல்.எப் சாலையில் காரில் வந்துகொண்டிருந்த நாராயணாவை மற்றோரு காரில் வந்து வழிமறித்த, 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு அவரை தாக்கியது. இதில் காயமடைந்த நாராயணா உடனடியாக காரை பின்னோக்கி இயக்கி அங்கிருந்து தப்பிச்சென்றார்.

காயமடைந்த நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடியவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments