பட்டப்பகலில் 3 பேரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல்

0 4934

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 3 பேரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொரட்டூரை சேர்ந்த அரவிந்தன் கடந்த 2018-ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பிரசாத், மணி மற்றும் திருமுல்லைவாயலை சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பிரசாத், மணி, ஆகாஷ் மூவரும் நேற்று நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்காக சென்றுவிட்டு பாடி மீன் மார்க்கெட் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதனையறிந்த அரவிந்தனின் தந்தை ரவி, சகோதரர்கள் அப்பன்ராஜ், விவேக் உள்ளிட்டோர் மூவரையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர்.
Breath

இதில் படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடியவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments