திருப்பதியில் இலவச டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் விநியோகம்

0 11747

வரும் டிசம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தததையடுத்து, நாளொன்றுக்கு 12 ஆயிரம் டோக்கன்கள் வீதம் நாளை காலை 9 மணி முதல்  தேவஸ்தான இணையதளம் மூலம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நாளை மறுநாள் முதல் தங்கும் அறைகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களே திருமலைக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments