பொம்மை என நினைத்து செல்பி எடுக்க நினைத்து உயிருள்ள முதலையிடம் சிக்கிய நபர்!

0 8075

பிலிப்பைன்ஸ் நாட்டில் பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க குழியில் இறங்கியரை நிஜமான முதலை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர் தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ககாயன் என்ற இடத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றார். அங்கு 12 அடி நீளத்திற்கு இருந்த முதலையைக் கண்ட அவர், அது பொம்மை என நினைத்து அது இருந்த குழிக்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த முதலை நெஹிமியாசின் கையைக் கடித்துப் பிடித்துக் கொண்டது.

அப்போதுதான் உண்மையான முதலையிடம் சிக்கிக் கொண்ட விஷயம் அவருக்குத் தெரியவர, சில விநாடிகள் அமைதியாக யோசிக்கும் போது, திடீரென தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments