முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்தியக் குழு இன்று சந்திப்பு

0 1352

மழை வெள்ளத்தை பார்வையிட வந்த மத்தியக் குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் குழு கடந்த 21 ஆம் தேதி சென்னை வந்தது.

இரண்டு குழுக்களாக பிரிந்து கடந்த 22ஆம் தேதி சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பகுதிகளிலும், 23-ஆம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் சென்று வெள்ளச் சேதங்களை கணக்கிட்டும், விவசாயிகளிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments