சாத்தான்குளத்தில் 2 இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள்

0 3191
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே சத்தீஸ்வரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் என்பவர், எதிரில் வரும் பைக்கை கவனிக்காமலும், இண்டிக்கேட்டர் லைட்டை பயன்படுத்தாமலும் திடீரென தனது வலது புறத்தில் திரும்பினார்.

இதனை சற்றும் எதிர்பாராத சத்தீஸ்வரன், முருகனின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதினார்.

இதில் சத்தீஸ்வரன் மற்றும் முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், முருகனுக்கு பின்னால் அமர்ந்து பயணித்த நபர் லேசான காயத்துடன் தப்பினார்.

இந்நிலையில், இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்சை எதிர்பாராமல் படுகாயமடைந்த ஒருவரை தங்கள் தோளில் சுமந்து கொண்டு ஓடியும், மற்றொருவரை ஸ்ட்ரெச்சரில் வைத்தும் அருகில் இருந்த அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments