ஆப்கானைத் தாலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் நிறைவு.. அமைதியை நிலைநாட்ட முடியாமல் திண்டாட்டம்

0 2744
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது அவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது அவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.

அகஸ்ட் 15ம் தேதி காபூலைக் கைப்பற்றி ஆப்கானை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாலிபான்கள் கொண்டு வந்தனர். 40 ஆண்டுகள் நடைபெற்ற போர்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மறுபுறம் ஐ.எஸ் அமைப்பினர் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மற்றும் தாலிபான்களை குறி வைத்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர். நாட்டில் அமைதியை நிலைநாட்டி பொருளாதாரத்தை மேம்படுத்த தாலிபான்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களைப் போல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை என ஆரம்பத்தில் அறிவித்தாலும் பெண் குழந்தைகள் ஆரம்ப பள்ளிக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி செல்லவும், உயர் பதவிகள் வகிக்கவும் விதிக்கப்பட்டத் தடையை கண்டித்து பெண்கள் போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments