தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஆபத்தை உணராமல் பேருந்தில் புட் போர்டு அடிக்கும் பள்ளி மாணவர்கள்

0 8882

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிகளிலும் பேருந்துக்கு பின்னால் உள்ள ஏணியிலும் தொங்கிய படி புட் போர்டு அடித்து பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, பேருந்தில் அஜாக்கிரதையாக பயணிக்கும் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

விபரீதத்தை உணராமல், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியரும் காவல்துறையினரும் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments