போலீஸ் நிலையத்தில் போதையில் ரகளை.. சிக்கிய சட்டச்சிறுத்தை..! வாண்டடா போய் வழக்கு வாங்கினார்..!

0 29301
விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ரகளை செய்யும் வீடியோ வைரல்

சீர்காழி காவல் நிலையத்திற்குள் குடிபோதையில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ஒருவர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசி ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் , விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இவர், சீர்காழி நீதிமன்ற பார் கவுன்சில் செயலாளராக உள்ளார்..!

சம்பவத்தன்று சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ராஜேஷ், தனியார் பேருந்து மீது தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் புகார் அளித்தனர்.

அவர்களின் புகாரின் பேரில் ராஜேஷின் கார் சீர்காழி காவல் நிலைத்திற்கு கொண்டு வரப்பட்டது. போதையில் விபத்தை ஏற்படுத்தியதக வழக்கறிஞர் ராஜேஷ் மீது நடவடிக்கை மேற்கொள்ள பேருந்து ஓட்டுனர் புகார் அளித்ததால், விசாரணைக்கு காவல் நிலையம் வந்த ராஜேஷ் அங்குள்ள காவலர்களை நீ யார் உன்னை என்ன செய்கிறேன் பார் ? என்று மிரட்டிய வீடியோ காட்சி வெளியானது.

தொடர்ந்து காவல் நிலையத்துக்குள் புகுந்து தான் பார் கவுன்சில் செயலாளர் என்று கூறி வம்பிழுத்ததோடு , விபத்தை ஏற்படுத்திய காரையும் எடுத்துச்சென்று விட்டதாக காவலுக்கு நின்ற போலீசார் வேதனை தெரிவித்தனர்.

போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டு விசாரணைக்கு வந்த இடத்தில் போலீசாரையும் தரக்குறைவாகப் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸப் மற்றும் முக நூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவிவருகின்றது.

இந்த சம்பவத்தில் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சீர்காழி காவல் நிலையத்தில் புகுந்து குடிபோதையில் தகராறு செய்த வழக்கறிஞரும் பார் கவுன்சில் செயலாளருமான ராஜேஷ், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ராஜா, சிவா,உள்ளிட்ட 3 பேர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்த போலீசார் ராஜேஷ், சிவா ஆகிய இருவரை கைது செய்தனர்.

தப்பி ஓடிய ஆட்டோ சங்க தலைவர் ராஜாவை போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments