உடல் உறுப்புகள் தானம் ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு

0 1915

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்வோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர், ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அரசிதழில் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments