தமிழகம் முழுவதும் நீர் ஆதாரங்களை பெருக்குவதே அரசின் தலையாய நோக்கம் - முதலமைச்சர்

0 1835

தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி நீர் ஆதாரங்களை பெருக்குவதே அரசின் தலையாய நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா உள்ளிட்ட இடங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப் பொருட்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் சுமார் 68,652 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்கான காப்பீடு, இழப்பீடு ஆகியவை உரிய முறையில் கிடைக்க வகை  செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments