உலகத் தரம் வாயந்த இந்தியாவின் முதல் ரயில் நிலையம் ; நவ.15 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

0 5150
உலகத் தரம் வாயந்த இந்தியாவின் முதல் ரயில் நிலையம்

உலகத் தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி வரும் 15 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.உணவகங்கள், ஏசி மயமான காத்திருப்பு அறைகள், படுக்கை வசதிகள், விஐபிக்களுக்கான தனி ஓய்வறைகள், 160 கண்காணிப்பு கேமராக்கள் , எஸ்கலேட்டர்கள். லிப்ட்டுகள், உள்ளே வரவும் வெளியே செல்லவும் தனித்தனி வாயில்கள், 24 மணி நேரம் கண்காணிப்பு போன்ற விமான நிலையத்துக்கு நிகரான அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த ரயில் நிலையம் தனியார் நிறுவனமான பன்சால் குழுமத்தால் 450 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments