குறுங்கோள்கள் பூமி மீது மோதாமல் தடுக்கும் திட்டம், டார்ட் என்ற விண்கலம் குறுங்கோள்கள் நோக்கி ஏவப்படும் - நாசா

0 10857

குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்கும் பாதுகாப்பு திட்டத்தை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது.

இரட்டை குறுங்கோள் திசைமாற்றும் சோதனை என்ற இந்த புதிய திட்டத்தின்படி, இம்மாத இறுதியில் விண்கலம் ஒன்றை ஏவி சிறுகோள் மீது மோதசெய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, வரும் 24-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள டார்ட் எனப் பெயரிடப்பட்ட விண்கலம், டைடிமாஸ் , டைமார்போஸ் குறுங்கோள்கள் நோக்கி செலுத்தப்பட்ட உள்ளன.

இது குறித்து தெரிவித்த நாசாவின் கிரகப் பாதுகாப்புத்துறை அதிகாரி லின்ட்லே ஜான்சன், இது சோதனை அடிப்படையிலான முயற்சி என்றும், விண்கலம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆராய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கலிபோர்னியாவின் வாண்டென்பெர்க்  விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவப்படும் டார்ட் விண்கலம், அடுத்தாண்டு செம்படம்பரில் குறுங்கோள்களை அடையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments