10 நாட்களாக சுற்றித் திரிந்த காட்டுயானை, மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

0 1863

ஒடிசா மாநிலம் கேந்தரபாரா பகுதியில் பத்து நாட்களாக சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

சுமார் 300 கிலோமீட்டர் தூரம் அலைந்து திரிந்த அந்த யானை கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. ஒருவரை மிதித்துக் கொன்றதுடன் மேலும் இரண்டு பேரை பலமாகக் காயப்படுத்தியிருந்தது.

இதனால் மக்கள் இரவில் உறக்கம் இல்லாமல் தவித்தனர். யானையைப் பிடிக்க பத்து நாட்களாக அதைப் பின்தொடர்ந்த வனத்துறையினர் ஒருவழியாக யானையை சிறைப்பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments