ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் எல்லையில் தீபாவளியை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி

0 1970

பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா முன்களப் பகுதியில்  நமது ராணுவ வீரர்களுடன் கொண்டாட இருக்கிறார். 

அவரது வருகையை ஒட்டி நவ்ஷெராவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன்  சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டி ல் பிரதமர் ஆனது  முதல் மோடி ஒவ்வொரு தீபாவளியையும், எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

அப்போது ஜவான்களுக்கு இனிப்புகளையும் இதர பரிசுகளையும் மோடி வழங்குவது வழக்கம். 2019 ல் ரஜோரியில் ஜவான்களுடன் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

இதற்கு முன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில எல்லைப் பகுதிகளிலும் பிரதமர் மோடி தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments