ஐபிஎல்லில் புதிய அணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

0 3123

ஐபிஎல்லில் மேலும் 2 டீம்களை சேர்ப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை துபாயில் BCCI  எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று  முடிவடைகிறது.

தற்போது எட்டாக இருக்கும் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக  உயர்த்த பிசிசிஐ முடிவு செய்து அதற்காக விருப்பம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகளை கோரியது. அகமதாபாத்தில் இருந்து அதானி குழுமம் அல்லது டாரண்ட் மருந்து நிறுவனம் ஒரு அணிக்காக விண்ணப்பிக்கும் என கூறப்படுகிறது. ஆர்பி-சஞ்சிவ் கோயங்கா குழுமமும் விண்ணப்பம் அளிக்க உள்ளது.

அமெரிக்காவில் பிரபலமான மான்செஸ்டர் யுனைட்டட் உரிமையாளரான Glazer குடும்பமும்  ஒரு அணிக்காக விண்ணப்பிக்கும் என சொல்லப்படுகிறது. ஒடிசா அரசுடன் சேர்ந்து ஒரு அணியை உருவாக்க பிரபல எஃகு வர்த்தகரான நவீன் ஜிண்டால் முயற்சிக்கிறார். அகமதாபாத், லக்னோ, இந்தூர், கட்டாக் ஆகிய பெயர்களில் ஏதாவது 2 அணியை பிசிசிஐ தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments