தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

0 1885

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21-ந் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சியில் இடி, மின்னலுடன் கூடிய மிக கன மழையும், 22-ந் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments