ரப்பர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து 1 ஊழியர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்

0 1856

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லன் விளை பகுதியில் குரியன் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தொழிற்சாலையில் அதிகாலை திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதில் பாய்லர் வெடித்ததாக கூறப்படுகிறது.

அதில், பணியில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாலி மகத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பணியாளர்களுக்கு தக்கலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments