இரு குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. மன அழுத்தத்தில் 3 மாத கர்ப்பிணி, காதல் கணவருடன் தற்கொலை..!

0 2201

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காதல் ஜோடியின் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் 3 மாத கர்ப்பிணியும், அவரின் காதல் கணவரும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிளாமரம் கிராமத்தை சேர்ந்த சமையல் மாஸ்டர் நாகராஜ், செவிலியர் தனலட்சுமியும் 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தனலட்சுமி கர்ப்பம் தரித்துள்ளார். இருவரின் குடும்பத்தாருக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால், மன அழுத்தத்தில் இருந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments