குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு அபராதம் - மாநகராட்சி ஆணையம்..!

0 2036

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 நபர்களிடம் இருந்து 3 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய், பொது இடங்களில் கட்டுமான கழிவுப் பொருட்களை கொட்டிய 123 நபர்களிடம் இருந்து 3 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் என மொத்தம்  6 லட்சத்து 43 ஆயிரம்  ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே  பொதுமக்கள் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை பொது இடங்கள் மற்றும் நீர் வழித் தடங்களில் கொட்டுவதைத் தவிர்க்கும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments