ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்..போதை ஆசாமியை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்த கிராம மக்கள்

0 2431

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிபோதையில் 9 வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனைப் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

கத்தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சிறுமி பள்ளி விட்டு வரும்போது, குடிபோதையில் வழிமறித்து அருகிலிருந்த கரும்புத் தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள், ஜெயக்குமாரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினர். பிறகு போலீசாருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்து ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments