அருணாச்சலப் பிரதேசத்திற்கு வெங்கையா நாயுடு சென்றதற்கு சீனா ஆட்சேபம்

0 2041

குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு அண்மையில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் சென்றதற்கு, சீனா ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் கருத்தை நிராகரிப்பதாகவும், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வது போலவே, இந்திய தலைவர்கள் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் செய்கிறார்கள் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபத்தின் ஒரு பகுதி என்று உரிமை கொண்டாடும் சீனா, அங்கு இந்திய தலைவர்கள் செல்லும் போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments