கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் ; காரை ஓட்டி வந்தவரை கைது செய்தது போலீஸ்

0 2717
காரை ஓட்டி வந்தவரை கைது செய்தது போலீஸ்

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கார் ஏற்றி விவசாயிகள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், அந்த கார் அணிவகுப்பில் வந்த காரின் ஓட்டுனரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கார், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருப்பவரும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுமான ஆஷிஷ் மிஸ்ராவின் நெருங்கிய உதவியாளருக்கு சொந்தமானது என போலீசார் தெரிவித்தனர்.

லக்கிம்பூர் கேரியில், கடந்த 3 ஆம் தேதி, போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கார் ஏற்றியதில் விவசாயிகள் 4 பேரும், அதை தொடரந்து நடைபெற்ற வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவர் மற்றும் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் உள்ளிட்ட 4 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments