பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்

0 3695
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

1965ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில், ஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடையில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த்..

கே.பாலசந்தர் இயக்கிய பூவா தலையா, பாமா விஜயம், எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்..

ராஜநாகம், அவள், காசேதான் கடவுளடா போன்ற பல திரைப்படங்களில் அவர் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிகணேசனின் மகனாக நடிப்பை வெளிப்படுத்தினார் ஸ்ரீகாந்த்.

ரஜினிகாந்த் திரையுலகில் வளர்ந்து வந்த நிலையில் அவருடைய எதிர்மறையான பாத்திரத்தை, நாயகனாக மாற்ற உதவியது பைரவியில் ஸ்ரீகாந்த்தின் வில்லன் நடிப்பு...

ஜெயகாந்தன் எழுதி பீம்சிங் இயக்கிய சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் தனித்துவமான குணச்சித்திர நடிப்பை வழங்கினார் ஸ்ரீகாந்த்.

50 படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீகாந்த், சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஸ்ரீகாந்த் காலமானார். 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பங்களிப்பை அளித்துள்ள ஸ்ரீகாந்த் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments