கொரோனா 2வது அலையை நாம் இன்னும் கட்டுப்படுத்தவில்லை ; மத்திய சுகாதார அமைச்சகம்

0 3180
கொரோனா 2வது அலையை நாம் இன்னும் கட்டுப்படுத்தவில்லை

கொரோனா 2வது அலையை நாம் இன்னும் கட்டுப்படுத்தவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா தொற்றின் சவால் இன்னும் முடிவடையவில்லை என்றார். எனவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.

பண்டிகை காலம் நெருங்குவதால் அக்டோபர், நவம்வர், டிசம்பர் மாதங்களில் எச்சரிக்கையாக, விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நெரிசலான இடங்கள், தேவையற்ற பயணங்களை தவிர்த்து, ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம் என்றும் லாவ் அகர்வால் கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments