பைக்கில் அதிவேகமாக வந்த சிறுவர்கள் மற்றொரு பைக் மீது மோதி விபத்து..!

0 2202

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த சிறுவர்களால் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வண்ணாரப்பாளையத்தில் மூர்த்தி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையின் மறுபுறமாக திரும்ப முயற்சித்தார். சாலையை கவனமாக கடக்க முயன்றும், எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மூர்த்தி மீது பலமாக மோதியது.இதனால் மூர்த்தி சாலையில் சுழன்று விழுந்ததுடன், இரண்டு சிறுவர்களும் தரையில் தேய்த்தபடியே சென்று விழுந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி மற்றும் இரண்டு சிறுவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிகளை மீறி லைசன்ஸ் இல்லாமலும், அதிவேகமாகவும் சிறுவர்கள் வாகனம் ஓட்டி வந்ததே விபத்திற்கு காரனம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments