பிரிட்டன் குடிமக்கள் இந்தியா வந்தால் 10 நாள் தனிமை கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு

0 2246

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வருவோருக்கு 10 நாட்கள் தனிமை கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு பதிலடியாக பிரிட்டன் நாட்டவர் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இந்திய அரசு கடந்த 1-ஆம் தேதி விதித்தது.

மேலும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் ஒருமுறையும், வந்தபின் எட்டாவது நாளில் ஒருமுறையும் கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் இந்தியர்களுக்கு  இந்த கட்டுப்பாடுகள்  கிடையாது எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments