நீதிபதியை பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

0 2957
நீதிபதியை பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

நீதிபதியை பணி செய்யவிடாமல் 25 நிமிடம் தடுத்து வைத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. நடிகர் சிவாஜி கணேஷனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதற்காக சாலைகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை நிறுத்திய போலீசார், அவ்வழியாக நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் தடுத்துள்ளனர். இதனால் நீதிமன்ற பணி பாதிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி, இதுபற்றி உள்துறை செயலாளர் பிரபாகர் விளக்கம் தரவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து காணொலியில் ஆஜரான பிரபாகரிடம், எதனடிப்படையில் தடுத்து நிறுத்தினீர்கள்? என கேட்ட நீதிபதி, முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தரும் மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர், எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments