அரசு பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பத்தரை சவரன் தங்க நகைகள் பறிப்பு

0 2041
ஈரோட்டில் அரசு ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பத்தரை சவரன் தங்க நகைகள் பறிப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பெண் ஊழியர் மீது பைக்கை மோதி கீழே தள்ளிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி பத்தரை சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலால் வரித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் உமாமகேஸ்வரி என்பவர் பணி முடிந்து மூலப்பாளையம் ரைஸ் மில் ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், உமாமகேஸ்வரியின் இருசக்கர வாகனம் மீது பைக்கை மோதி கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், தாலி என அனைத்தையும் பிடுங்கி கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments