இரண்டு அடுக்கு சாலையாக அமைகிறது மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை

0 2433
இரண்டு அடுக்கு சாலையாக அமைகிறது மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை

இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை அமையவுள்ளது என்று நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் பேசிய அவர், சாலை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் நிறைவடையும் என்றார். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

பாலத்தின் முதல் தளத்தில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகனங்கள் செல்லும் வகையிலும், இரண்டாம் தளத்தில் மதுரவாயலில் இருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கண்டெய்னர் போக்குவரத்து நடைபெறும் வகையிலும் அமைக்கப்படுவதாக தீரஜ்குமார் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments