ஒலியை விட 5 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைச் சோதித்துப் பார்த்தது வடகொரியா

0 1810

ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைச் சோதித்துப் பார்த்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா அதன் ராணுவத்தின் வலிமையைப் பல மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக செவ்வாயன்று ஜகாங் மாகாணத்தில் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்ததாகக் கொரியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனை முடிவில் அனைத்துத் தொழில்நுட்பச் சிறப்பியல்புகளும் அதன் வடிவமைப்புத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

வடகொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையைச் செலுத்திச் சோதித்துப் பார்த்ததைத் தென்கொரிய ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments