இன்றைய ஐ.பி.எல். தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள்... சென்னை- கொல்கத்தா, பெங்களூரு - மும்பை அணிகள் பலப்பரீட்சை

0 2151

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

அபுதாபி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை அணி 7 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 4 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலும் உள்ளது.

இதேபோல் மற்றொரு லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments