60வயது மூதாட்டியை கடித்த நரியினை கம்பால் அடித்து கொன்ற பொதுமக்கள்

0 3673

கும்பகோணம் அருகே 60வயது மூதாட்டியை கடித்த நரியினை பொதுமக்கள் கம்பால் அடித்துக் கொன்றனர்.

கல்லூர் ஊராட்சியைச் சேர்ந்த மணிக்குளம் கிராமத்தில் கல்யாணி என்ற மூதாட்டி ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த நரி ஒன்று அவரை கழுத்தில் கடித்துள்ளது.

மூதாட்டி அலறியதால்  ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கம்புகள்,கற்கலால் அந்த நரியை அடித்துக் கொன்றனர்.  நரி கடித்ததால் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments