உயிரிழந்தவரின் உடலை கிரேனில் கட்டித் தொங்கவிட்ட தலிபான்கள்... மீண்டும் கொடிய தண்டனைகளை அமல்படுத்துவதால் மக்கள் அச்சம்

0 6210

ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் நேற்று கிரேன் ஒன்றில் உயிரிழந்தவரின் உடலை தலிபான் அமைப்பினர் கட்டித் தொங்கவிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹெராட் நகரில் உள்ள மைய சதுக்கத்திற்கு, உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை தலிபான் அமைப்பினர் எடுத்து வந்தனர். பின், அதிலிருந்த ஒரு உடலை மட்டும், அவர்கள் ராட்சத கிரேனில் கட்டி தொங்கவிட்டனர்.மீதமுள்ள மூன்று உடல்களும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

சுட்டுக்கொல்லப்பட்ட இவர்கள் நான்கு பேரும் கடத்தலில் ஈடுபட்டபோது சிக்கியதாக தலிபான் அமைப்பினர் தெரிவித்தனர். மீண்டும் கொடிய தண்டனைகளை தலிபான்கள் அமல்படுத்துவதால், இந்த காட்சியைப் பார்த்த மக்கள் பீதியடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments