காங்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!

0 1731

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காங்கிரீட் மேற்கூரையை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 16 வயது சிறுவன் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்தான்.

நல்லியாம்பாளையத்தில் மணியன் என்பவரது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியின் போது அந்த சிறுவன் காங்கிரீட் மேற்கூரையை இயந்திரம் கொண்டு (Demolition Hammer) இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

அப்போது சிறுவன் நின்றிருந்த பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். கட்டிட ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் என்பவரிடமும், உரிமையாளர் மணியனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments