கார்த்தி சிதம்பரம் முன்பு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி, ரகளையில் ஈடுபட்ட தொண்டர்கள்

0 2957

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், கோஷ்டி மோதல் ஏற்பட்டு தொண்டர்கள் அடிதடி, ரகளையில் இறங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளையும் சொள்ளையுமாக தொடங்கிய நிலையில், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள், கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியில் தாங்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறி அவர்கள் பிரச்சனையை கிளப்பியபோது, எதிர்கோஷ்டி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த வாக்குவாதம் இரு கோஷ்டிகளுக்கு இடையே கைகலப்பாக உருவானது.

பின்னர் நாற்காலிகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையிலேயே இந்த ரகளை அரங்கேறியது.

அதிருப்தி கோஷ்டிகள் அடிதடி, ரகளையால் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments