இன்றைய ஐ.பி.எல். தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள் : டெல்லி VS ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் VS பஞ்சாப் அணிகள் மோதல்

0 1912

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

அபுதாபி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி 7 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 4 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும் உள்ளது.

இதேபோல் மற்றொரு லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments