கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் ; ஸ்கூட்டரை ஓட்டி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் லாரியின் டயரில் சிக்கி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 4709
ஸ்கூட்டரை ஓட்டி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் லாரியின் டயரில் சிக்கி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தருமபுரி அருகே டிப்பர் லாரியின் பக்கவாட்டில் ஸ்கூட்டர் உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியர், லாரியின் பின் டயரில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாங்கரை அரசுப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றி வந்த முத்துராஜ், காலை வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். இண்டூர் கடை வீதி அருகே இவருடைய ஸ்கூட்டருக்கு இணையாக டிப்பர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.

சாலை நடுவே சென்றுகொண்டிருந்த முத்துராஜ், பக்கவாட்டுக் கண்ணாடியை கவனிக்காமல் திடீரென வலதுபுறமாக ஏற முயன்றுள்ளார். அப்போது ஸ்கூட்டர் லாரி மீது உரசி, நிலைதடுமாறி முத்துராஜ் கீழே விழுந்தார்.

கழுத்துப்பட்டையைப் பொருத்தாமல் போனதால், முத்துராஜ் அணிந்திருந்த தலைக்கவசமும் வேறொரு பக்கம் போய் விழுந்தது. கீழே விழுந்தவரின் உடல் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முழுக்க முழுக்க கவனக்குறைவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments