தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2835

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,  அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

மேலும், வங்கக் கடல் பகுதியில் வருகிற 24-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments