பத்மனாபசுவாமி கோவில் அறக்கட்டளையின் 25 ஆண்டு கால கணக்குவழக்குகளை தணிக்கை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 2080

புகழ் பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீபத்மனாபசுவாமி திருக்கோயில் தொடர்பான ஆலய அறக்கட்டளையின் கடந்த 25 ஆண்டு கால கணக்குவழக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரின் மேல்முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். கொரோனா காரணமாக கோவிலின் வருமானம் குறைந்து விட்டதாகவும் மாதந்தோறும் ஒன்றேகால் கோடி ரூபாய் செலவு பிடிக்கும்  நிலையில் 70 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது வருமானமாக கிடைக்கிறது என கோயில் நிர்வகிக்கும் குழு வாதிட்டது.

அதே சமயம் கோவில் அறக்கட்டளையிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், சுமார் 2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதால் அதிலிருந்து கோவில் செலவுக்கு பணம் தர வேண்டும் என வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள்  அறக்கட்டளையின் 25 வருட கணக்குகளை 3 மாதங்களுக்குள் தணிக்கை செய்து முடிக்க உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments