ஐந்து நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் மோடி

0 1799

ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றும் அவர், வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனையும் சந்தித்துப் பேசுகிறார்

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு வரும் 24ஆம் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதில் பங்கேற்கிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குதல் குறித்து தலைவர்கள் பேச உள்ளனர். மேலும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துதல் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார். அப்போது, ஆப்கானிஸ்தானின் நிலைமை, சீனாவின் பிராந்திய போர், காலநிலை மாற்றம், தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாத நெட்வொர்க்குகளை அகற்றுவது, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் குறித்து மோடியும், பைடனும் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் தொடர்ச்சியாக வரும் 25ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார். அப்போது, ஆப்கானிஸ்தான் பிரச்னை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகள், காலநிலை மாற்றம் குறித்தும் அதன் முன் உள்ள சவால்கள் மற்றும் ஐநா உள்ளிட்ட பிற பலதரப்பு அமைப்புகளைச் சீர்திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி பேச உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments