முதல் மனைவி வீட்டு முன்பு கைக்குழந்தையுடன் 2வது மனைவி தர்ணா

0 3504
முதல் மனைவி வீட்டு முன்பு கைக்குழந்தையுடன் 2வது மனைவி தர்ணா

கரூரில் கணவனால் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் 2வது மனைவி பச்சிளம் குழந்தையுடன் முதல் மனைவி வீட்டின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவருக்கு லீலாவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த கௌசல்யா என்ற பெண்ணை கடந்த 2011ஆம் ஆண்டு 2வதாகத் திருமணம் செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

இரண்டு மனைவிகளோடும் குடும்பம் நடத்துவதில் அவ்வப்போது பிரச்சனை எழுந்து வந்த நிலையில், போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக கணவன் தனது வீட்டுக்கு வருவதோ, பொருளாதார உதவி செய்வதோ இல்லை எனக் கூறி, லீலாவதி வீட்டு முன்பு சாலை நடுவே அமர்ந்து கௌசல்யா தர்ணாவில் ஈடுபட்டார்.

8 மாத குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டவரை சமாதானம் செய்ய போலீசார் வந்தபோது கணவனோடு தன்னைச் சேர்த்து வைக்கும்படி கௌசல்யா போலீசாரின் காலில் விழுந்து அழுதார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments