ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரி கொலை விவகாரம் ; கொலைக்கு ரஷ்யாவே பொறுப்பு என ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பு

0 1667
கொலைக்கு ரஷ்யாவே பொறுப்பு என ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் சோவியத் யூனியனின் உளவு அமைப்பான KGB யில் பணியாற்றிய அதிகாரி அலக்சாண்டர் லிட்வின்கோ  கொல்லப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு என ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ல் லண்டனில் உள்ள மில்லினியம் ஹோட்டலில், அவர் குடித்த கிரீன் டீயில், ரஷ்ய கொலையாளிகள் இருவர் போலோனியம் 210 எனப்படும் விஷத்தை கலந்ததாகவும், அதை குடித்த சில வாரங்களில் அலக்சாண்டர் லிட்வின்கோ இறந்து விட்டதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அவர் கொல்லப்பட்டதில் தங்களுக்கு பங்கில்லை என ரஷ்யா மறுத்தாலும் இந்த கொலை குறித்து பிரிட்டனில் நடந்த நீண்ட விசாரணையின் முடிவில், ரஷ்ய அதிபர் புதின் அலக்சாண்டர் லின்வின்கோவை கொல்ல ரஷ்ய உளவுத்துறைக்கு அனுமதி வழங்கினார் என முடிவு செய்யப்பட்டது.

KGB யின் வழி வந்த ரஷ்ய உளவு அமைப்பான ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீசஸ்-ன் வழிகாட்டலின் படி இந்த கொலையை நடத்தியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முடிவுகளையும் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments