ஆற்றில் மூழ்கி மகன் இறந்த தகவலைக் கேட்ட தாய் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

0 38492
ஆற்றில் மூழ்கி மகன் இறந்த தகவலைக் கேட்ட தாய் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

புதுச்சேரியில் ஆற்றில் மூழ்கி மகன் இறந்த தகவலைக் கேட்ட தாய் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பை சேர்ந்த வேலு - லட்சுமி தம்பதியின் இரண்டாவது மகன் ஜீவா.

ஞாயிற்றுக்கிழமை மாலை அரியாங்குப்பம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஜீவா, சுற்றுலா மையத்துக்காக ஆழப்படுத்தப்பட்ட பகுதியில் விவரம் தெரியாமல் இறங்கிதால் நீரில் மூழ்கினார். வீட்டிலிருந்த ஜீவாவின் தாய் லட்சுமிக்கு இந்தத் தகவல் தெரியவரவே, ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், காலை ஜீவாவின் சடலமும் கரை ஒதுங்கியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments