இங்கிலாந்தின் டயர் 2 விசா பெறுபவர்களுக்கான உச்ச வரம்பிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விலக்கு

0 114

இங்கிலாந்தில் டயர் 2 எனும் இரண்டாம் நிலை விசா பெறுபவர்களுக்கான உச்ச வரம்பிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விலக்கு அளித்துள்ளதால் ஏராளமான இந்திய மருத்துவர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் இரண்டாம் நிலை விசா மூலம் ஐரோப்பியர் அல்லாதவர் 20 ஆயிரத்து 700 பேர் மட்டுமே அங்கு சென்று பணியாற்ற, பயிற்சி பெற அனுமதி பெற முடியும். இதனால், அங்கு செல்ல இருந்த பல இந்திய மருத்துவர்கள், செவிலியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், இரண்டாம் நிலை விசா பெறுபவர்களுக்கான உச்ச வரம்பில் இருந்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும விலக்கு அளிப்பதாக அந்நாட்டு உள்துறை அறிவித்துள்ளது. ஆனால், டயர் 4 எனும் 4-ஆம் நிலை விசா பெறும் குறிப்பிட்ட சர்வதேச மாணவர்களுக்கான விண்ணப்ப விதிகளைத் தளர்த்தியுள்ள போதும், அந்த குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லாததால், அங்கு கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் வாய்ப்பு இழக்கக் கூடும் சூழல் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments