திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை ; போலீசார் விசாரணை

0 3025
திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திருமணமான 7வது நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. செருவாங்கி கிராமத்தைச் சேர்ந்த அன்பரசி என்ற அந்தப் பெண்ணுக்கும் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த இராமராஜனுக்கும் கடந்த வாரம் 8ஆம் தேதிதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், நேற்று விருந்துக்காக தாய் வீட்டுக்கு கணவருடன் வந்திருந்த அன்பரசி, இன்று அதிகாலை வீட்டின் ஓர் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments